×

குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்புகள் எதுவும் இல்லை: எல்.முருகன் பேட்டி

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்புகள் எதுவும் இல்லை என எல்.முருகன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், 2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை நாடு முழுவதும் ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது. இதற்கான சட்ட விதிகள் அரசிதழில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே மேலும் ஒரு புதிய வந்தே பாரத் ரயில் சேவையை அகமதாபாத்தில் இருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ரயில் பயணிகளுக்கு பூக்களை கொடுத்து வழியனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்புகள் எதுவும் இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தால் வெளிநாட்டில் வாழும் இந்து சிறுபான்மையினருக்கு நலன் இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அனைவரும் சிஏஏ சட்டம் பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் இவ்வாறு கூறினார்.

The post குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்புகள் எதுவும் இல்லை: எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : L. Murugan ,Delhi ,Lok Sabha ,Union Government ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...